×

சாஸ்தா நகர் ஐயப்பா ஆசிரமத்தில் கார்த்திகை, மார்கழியில் தினமும் 800 பக்தர்களுக்கு அன்னதானம்-நிர்வாகிகள் தகவல்

சேலம் : சேலம் குரங்குச்சாவடி சாஸ்தா நகர் ஐயப்பா ஆசிரமத்தில் கார்த்திகை, மார்கழியில் 60 நாட்களுக்கும் தினசரி 800பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் குரங்குச்சாவடி சாஸ்தா நகரில் ஐயப்பா ஆசிரமம் உள்ளது. இந்த ஐயப்பா ஆசிரமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 1ம் தேதி முதல்  தை 1ம் தேதி வரை ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிவித்து சபரிமலை யாத்திரைக்கு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று கார்த்திகை முதல் தேதியையொட்டி ஐயப்பா ஆசிரமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்பபக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

இது குறித்து ஐயப்பா ஆசிரமம் டிரஸ்டி தலைவர் நடராஜன் கூறியதாவது:சாஸ்தா நகர் ஐயப்பா ஆசிரமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதத்தில் ஐயப்பபக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்கின்றனர். இங்கு தை 1ம் தேதி வரை ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து கொள்ளலாம். மேலும் பக்தர்கள் இங்கேயே இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லலாம். அதற்கான அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல் நாளில் 800 பக்தர்கள் மாலை அணிந்தனர். ஆனால் இன்று(நேற்று) ஒரே நாளில் 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். 4500 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.

இங்கு 60 நாட்களுக்கும் தினசரி மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை 800 முதல் ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 2019ம் ஆண்டு 60 நாட்களில் 8ஆயிரம் பக்தர்கள் மாலை அணிந்தனர். நடப்பாண்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாலை அணிவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஹைதராபாத்தில் இருந்து 200 பக்தர்கள் நடைபயணமாக சபரிமலைக்கு செல்வார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு ஐயப்பா ஆசிரமத்தில் தங்குவார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தங்குமிடம் ஏற்படுத்தி தருகிறோம்.

கோயிலில் புதியதாக 54 தங்கத்தாமரை செய்யப்பட்டுள்ளது. கட்டண முறையில் ஐயப்பன் சன்னதியில் தங்கத்தாமரை வைத்து பூஜை செய்யப்படுகிறது. இவர்களுக்கு கோயில் சார்பில் அனைத்து உபசரிப்பு செய்யப்படும். சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் இங்குள்ள ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யலாம். நெய் வழங்கும் பக்தர்களை ஐயப்பன் முன் அமர வைத்து நெய் அபிஷேகம் செய்யப்படும். இவ்வாறு நடராஜன் கூறினார். அப்போது செயலாளர் சண்முகம், பொருளாளர் சரவணபெருமாள், உதவி செயலாளர் சிவக்குமார், சட்டஆலோசகர் அய்யப்பமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Manadhanam ,Shasta Nagar ,Iyappa ,Asamam Karthiga ,Margari , Salem: In Salem Kuranguchavadi Shasta Nagar Ayyappa Ashram, Karthikai, Margazhi will give food to 800 people daily for 60 days.
× RELATED ஒட்டன்சத்திரம் நகராட்சி குடிநீர்...