×

முதல் ஒருநாள் ஆட்டம் ஆஸியிடம் அடங்கிய சாம்பியன்

அடிலெய்டு: ஆஸ்திரலேியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள்  தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டம் நேற்று அடிலெய்டில்   பகல்/இரவு ஆட்டமாக நடந்தது. டாஸ் வென்ற ஆஸி பந்து வீச்சை தேர்வு  செய்தது. அதனால் முதலில் களம் கண்ட இங்கிலாந்து  அடுத்தடுத்து விக்கெட்களை  பறிகொடுத்த வண்ணம் இருந்தது. ஆனால் இன்னொரு முனையில் அதிரடி ஆட்டக்காரர்  டேவிட் மாலன் பொறுப்புடன் விளையாடி சதம் விளாசினார். அவர் 46வது ஓவர் வரை  தாக்குப்பிடித்து 134(128பந்து, 12பவுண்டரி, 4சிக்சர்) ரன்னில்  ஆட்டமிழந்தார்.  கூடவே டேவிட் வில்லி ஆட்டமிழக்காமல் 34ரன் எடுக்க, இங்கி  50ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 287ரன் குவித்தது. கேப்டன் பட்லர்  29ரன் எடுத்தார். ஆஸி தரப்பில் கேப்டன் கம்மின்ஸ், ஸம்பா  தலா 3 விக்கெட்  எடுத்தனர்.

அதனையடுத்து 288ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர், டிராவிஸ் தலா 10பவுண்டரிகள், தலா ஒரு சிக்சர் அடித்து முறையே   86(84பந்து),  69(57பந்து)ரன்னில் ஆட்டமிழந்தனர். அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 147ரன்  எடுத்தனர்.  அடுத்து வந்த ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80(78பந்து, 9  பவுண்டரி, 1சிக்சர்)ரன் எடுக்க ஆஸி 46.5  ஓவரிலேயே இலக்கை எட்டியது. அந்த  அணி 4விக்கெட் இழப்புக்கு 291ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில்  நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது.  இங்கி தரப்பில்  ஜோர்டன்,  டவ்சன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். மாலன் ஆட்ட நாயகனாக தேர்வு  செய்யப்பட்டார்.


Tags : Aussies , First ODI, the Aussies are the defending champions
× RELATED ஆஸிக்கு 279 ரன் இலக்கு: 4 விக்கெட் இழந்து திணறல்