பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் கைக் குழந்தையுடன் பெண் தஞ்சமடைந்த விவகாரத்தில் சமூகநலத்துறை விசாரணை..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் கைக் குழந்தையுடன் பெண் தஞ்சமடைந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளிபாளையத்தில் தனது குழந்தையை மாமியார் விற்க முயற்சிப்பதாக கூறி மருமகள் போலீசில் தஞ்சமடைந்தார். சங்கீதாவின் குழந்தையை அவரது மாமியார் கோமதி விற்க வற்புறுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசில் தஞ்சமடைந்த தாய், கைக் குழந்தையை அரசு காப்பகத்தில் தங்க வைக்கவுள்ளதாக சமூகநலத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: