தமிழ்நாட்டில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முறையான அனுமதியின்றி சிலைகளை வைக்க அதிகாரிகளும் அனுமதிக்க கூடாது. முன்னாள் முதல்வரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் நேரடியாக அனுமதி வழங்கவில்லை. அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவே அறிவுறுத்தப்பட்டதாக நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். அனுமதி பெறும் வரை சிலையை திறப்பதோ, மரியாதை செய்வதோ கூடாது; பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. விருதுநகரில் இம்மானுவேல் சேகரனின் சிலையை அகற்றுவது தொடர்பான உத்தரவை ரத்து செய்யகோரிய வழக்கில் ஆணையிடப்பட்டது.

Related Stories: