ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள், ஊராட்சி அலுவலக வளாகம் ஆகிவற்றை காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஊரக வளர்ச்சித்துறையின் பயன்பாட்டிற்கான வாகனங்களின் சேவையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு வாகனங்கள் வழங்கக்கூடிய நிகழ்வுகள் நடைபெற்று நிலையில் ஊராட்சித்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.

மேலும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக பங்கேற்று திறந்து வைக்க உள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் திருவள்ளுர், சேலம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ரூ.24.71 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி, ஊராட்சி அலுவலக வளாகம் ஆகிவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைக்கிறார்.

Related Stories: