×

பழனி தண்டாயுதபாணி கோயிலின் கீழ் செயல்படும் 2 பள்ளிகள் 4 கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பழனி: மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.  பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் கீழ் செயல்படும் இரண்டு பள்ளிகள் நான்கு கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  

தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி, மலைப்பகுதிகளில் உள்ள 1545 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை 33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கு முதலமைச்சர் காலை உணவு திட்டம் என்ற பெயர்  நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மதுரையில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.  மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி பரிமாறிய முதல்வர் மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டார். இந்நிலையில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் கீழ் செயல்படும் இரண்டு பள்ளிகள், நான்கு கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

Tags : Palani Dandaidhani Temple ,CM. K. Stalin , Breakfast program in 2 schools and 4 colleges under Palani Thandayuthapani temple: Chief Minister M.K.Stalin inaugurated
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்;...