×

பிரித்விஷாவுக்கு வாய்ப்பு கொடுங்கப்பா...வலியுறுத்துகிறார் சேவாக்

மும்பை:டி20 உலக கோப்பையில் பவர்ப்ளேயில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. இந்திய அணி தோல்விக்கு இதுவே முக்கிய காரணமாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், மாஜி அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கூறியதாவது: இந்திய அணியில் ஒரு வீரரை நான் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் பார்க்க விரும்புகிறேன் என்றால் அது பிரித்வி ஷா தான். டெஸ்ட் அணியிலும் நீண்டகாலமாக பிரித்வி ஷா இல்லை. அவரை மீண்டும் இந்திய அணியில் பார்க்க விரும்புகிறேன். 2023 ஒருநாள் உலக கோப்பைக்கான அணியில் பிரித்வி ஷா இருப்பார் என நம்புகிறேன்.

பிரித்வி ஷா 150 ஸ்டிரைக் ரேட்டில் ஆடுகிறார். டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற வீரர் பிரித்வி ஷா என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார். 2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட் அணியில் இடம்பிடித்த  பிரித்வி ஷா காயமடைந்து அந்த தொடரிலிருந்து விலகினார். அதன்பின்னர் மீண்டும்  டெஸ்ட் அணியில் இடம்பிடித்து அறிமுக இன்னிங்சிலேயே சதமடித்து சாதனை படைத்த  பிரித்வி ஷா, 5 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில்  ஆடியுள்ளார்.

ஆனால் அவ்வப்போது ஃபிட்னெஸ் பிரச்னையால் அணியில்  தொடர்ச்சியாக இடம்பிடிக்க முடியாமல் தவித்த பிரித்வி ஷா அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். உள்நாட்டு கிரிக்கெட்டில் டி20, ஒருநாள்  போட்டிகளில் அபாரமாக பேட்டிங் ஆடி மலை மலையாக ஸ்கோரை குவித்து வருகிறார்  பிரித்வி ஷா. அண்மையில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் கூட  152 ஸ்டிரைக் ரேட்டில் தொடர் முழுக்க பேட்டிங் ஆடி மும்பை அணி கோப்பையை வெல்ல  உதவியது குறிப்பிடத்தக்கது.

Tags : Prithvisha ,Sehwak , Give Prithvisha a chance...Sehwak insists
× RELATED ஒரு தவறுக்காக ஒதுக்குவது நியாயம்...