×

ஆலாபுரம் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்

அரூர்: அரூர் அருகே ஆலாபுரம் ஏரி நிரம்பி உபரி நீர் பெருக்கெடுத்து வெளியேறி வருகிறது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் வாணியாறு அணைக்கட்டு உள்ளது. இதன் இடதுபுற கால்வாய் வழியாக வெளியேறும் நீரானது ஆலாபுரம் ஏரியை வந்தடைகிறது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் பெரிய ஏரியாக ஆலாபுரம் ஏரி விளங்குகிறது.

சேர்வராயன் மலையில் தொடர் மழை எதிரொலியாக ஆலாபுரம் ஏரிக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், ஏரிக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த ஏரியிலிருந்து பறையப்பட்டி ஏரி, அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது. இதனால், விவசாயிகள் மிகழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Alapuram , Alapuram Lake, Surplus Discharge
× RELATED தக்காளி கிரேடு ₹400க்கு விற்பனை