×

ராமநாதபுரம் அருகே தனியார் கல்லூரி விடுதியில் பரோட்டா, சிக்கன் கிரேவி சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், தனியார் கல்லூரி விடுதியில் நேற்றிரவு பரோட்டா, சிக்கன் கிரேவி சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லூரி விடுதி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியதில் பரோட்டா வெளியில் இருந்து வாங்கியதாக தகவல் கூறியுள்ளனர். பரோட்டா தயார் செய்து கொடுத்த நபரிடமும் -போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Barota ,Ramanathapuram , Ramanathapuram, College Hostel, Parotta, Chicken Gravy, Student, Mayakam
× RELATED போக்சோ வழக்கில் ஆஜராகாத தாம்பரம்...