×

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64.05 கோடியாக அதிகரிப்பு: 66.16 லட்சம் பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 64.05 கோடியாக உயர்ந்து உள்ளது. சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 5 லட்சத்து 21 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 626 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 62 கோடியே 2 லட்சத்து 34 ஆயிரத்து 690 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 66 லட்சத்து 16 ஆயிரத்து 264 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Tags : Global coronavirus cases rise to 64.05 crore: 66.16 lakh deaths
× RELATED மக்களவை தேர்தலில் ஒப்புகைச்...