×

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் இல்லத் திருமண விழா: துர்கா ஸ்டாலின் நடத்தி வைத்தார்

சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகன் இல்லத் திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நடத்தி வைத்தார்.  அரக்கோணம்  தொகுதி திமுக எம்.பியும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான எஸ்.ஜெகத்ரட்சகனின்  சகோதரி கோ.நாராயணி. இவரது மகனும், தாம்பரம் மாநகராட்சி துணை மேயரும்,  மாநகர அவைத்தலைவருமான கோ.காமராஜ் - காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட முன்னாள்  திமுக துணை செயலாளர் கலைவாணி காமராஜ் ஆகியோரின் மகன் டாக்டர்  ஜி.கே.அரவிந்த்ராஜ், தென்சென்னை மாவட்டம், புனித தோமையார்மலை தெற்கு  ஒன்றிய திமுக முன்னாள் செயலாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினரும், ஒன்றிய  கவுன்சிலருமான மேடவாக்கம் ப.ரவி - மேடவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்  சிவபூஷணம் ஆகியோரின் மகள் டாக்டர் ஆர்.நர்மதா. இவர்களின் திருமண வரவேற்பு  நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் மாலை திருவான்மியூர் ஸ்ரீராமச்சந்திரா  கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.  

 நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு மரக்கன்று பசுமை கூடை  வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் மு.க.தமிழரசு, அமைச்சர்கள்  துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன்,  ஆர்.காந்தி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, துணை பொது செயலாளர்  கனிமொழி எம்.பி, திமுக எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி,  நந்தகுமார், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன்,  பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் துறைமுகம் காஜா,  திமுக வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம்,  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுசெயலாளர் வைகோ, தமிழக  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சு.திருநாவுக்கரசர் எம்.பி,  எம்.கிருஷ்ணசாமி, பொருளாளர் ரூபி மனோகரன், தாம்பரம்  மாநகராட்சி மேயர் வசந்தகுமார் கமலக்கண்ணன், சென்னை மாநகராட்சி மேயர்  பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

 நேற்று நடந்த திருமண  நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின்  கலந்துகொண்டு மணமகனிடம் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி  வைத்தார். நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான  உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தா.மோ.அன்பரசன்,  செஞ்சி மஸ்தான், காந்தி, சிவசங்கரன், முத்துசாமி, மதிவேந்தன், புதுச்சேரி  முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம், ஆர்.எஸ்.பாரதி, எம்பிக்கள்  தமிழச்சி தங்கபாண்டியன், கதிர் ஆனந்த், தெய்வசிகாமணி, பார்த்திபன், கிரி  ராஜன், அப்துல்லா, விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏ.,க்கள் இ.கருணாநிதி, டாக்டர்  எழிலன், எழிலரசன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், நா.சே.ராமச்சந்திரன் உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களை எம்.பி  எஸ்.ஜெகத்ரட்சகன், மணமக்களின் பெற்றோர் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர்  கோ.காமராஜ் - கலைவாணி காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் மேடவாக்கம் ப.ரவி -  சிவபூஷணம், ஜெகத்ரட்சகனின் மகள் டாக்டர் ஸ்ரீநிஷா இளமாறன், மகன் சந்தீப்  ஆனந்த்  டாக்டர் மலர் மங்கை ஆகியோர் வரவேற்றனர்.


Tags : Dizhagam ,Jekatratrakhan ,Durga Stalin , DMK, MP Jagadratsakan, conducted the house wedding ceremony, Durga Stalin
× RELATED சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி....