மதுரையில் தனியார் நட்சத்திர விடுதியில் பாரம்பரிய பிரியாணி திருவிழாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

மதுரை: மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாரம்பரிய பிரியாணி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் சிந்தாமணிபுர வழி சாலையில் அமைந்துள்ள அமிகா தனியார் நட்சத்திர விடுதியில் ஏராளமான வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நட்சத்திர விடுதி சார்பில் மாபெரும் பிரியாணி திருவிழா நடைபெற்றது. இதில் நடிகையும், படகியுமான கிரேஸ் கருணாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

4 நாட்கள் நடைபெற்ற பிரியாணி திருவிழாவில் ஆம்பூர் பிரியாணி, காஷ்மீரி பிரியாணி, கேரளா மூங்கில் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, லக்னோ பிரியாணி உள்ளிட்ட 13 வகை பிரியாணிகளை சமைத்து உணவு நிபுணர்களை அசத்தினர். அசைவம் மட்டுமின்றி சைவத்திலும் 18 வகையான பிரியாணிகள் மற்றும் சில்லி ரசகுல்லா, பாலாடை பாயாசம், டேட்ஸ் கேக் ஆகிய இனிப்பு வகைகளும் தயாரிக்கப்பட்டன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையே இந்திய பாரம்பரிய உணவுகள் சிறப்பை வெளிக்காட்டும் வகையில் நடைபெற்ற பிரியாணி திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று பிரியாணிகளை ருசித்தனர்.   

Related Stories: