அதிமுக ஓபிஎஸ் அணி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் விகேபி சங்கர் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கேடிசிநகர்: ஓபிஎஸ் அணி நெல்லை மாநகர் மாவட்ட   செயலாளராக விகேபி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அவர் நெல்லையில் உள்ள  எம்ஜிஆர், அண்ணா மற்றும் அனைத்து சமுதாய தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நெல்லை கொக்கிரகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ தலைமையில்  எம்ஜிஆர் சிலைக்கு  வி.கேபி.சங்கர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில்  மாநில அமைப்பு செயலாளர் எஸ்டி காமராஜ், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் சிவலிங்கமுத்து, மாநில ஜெ. பேரவை துணைச்செயலாளர் வக்கீல் முத்துக்குமார், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் டென்சிங் சுவாமிதாஸ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பால்கனி, பொதுக்குழு உறுப்பினர் பால்பாண்டி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் முருகேசன், மாநகர் மாவட்ட ஜெ.பேரவை தலைவர் கணபதிசுந்தரம், ஜெ.பேரவை செயலாளா் குபேந்திரா மணி, பாளை பகுதி இளைஞரணி செயலாளர் டால் சரவணன், மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் பாளை நாராயணன், மாணவரணி செயலாளர் செல்வபிரதீப், பாளை ஒன்றிய செயலாளர்கள் வள்ளல் வைகுண்டம், சிதம்பரம், களக்காடு வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.எம்.சாமி, ஏர்வாடி நகர செயலாளர் பீர்முகமது மற்றும் நிர்வாகிகள் சுந்தர்ராஜ், இளைஞரணி செயலாளர் மானூர் கந்தசாமி, வக்கீல் கந்தையா, ஊராட்சி செயலாளர் குப்பக்குறிச்சி வேல்பாண்டியன், ரோகிணி பாண்டி, டாக்டர் ராமசுப்பிரமணியன், அவைத்தலைவர் பரமசிவம், லெனின், பொட்டல் மாரிப்பாண்டி, கிருஷ்ணன், அசோகன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதுபோல் நெல்லை சந்திப்பில் அண்ணா சிலை, முத்துராமலிங்கதேவர், அம்பேத்கர் சிலை, காமராஜர் சிலை மற்றும் பாளையில் உள்ள வஉசிதம்பரனார் சிலை, வீரன் அழகுமுத்துகோன், ஒண்டிவீரன்  ஆகிய தலைவர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories: