×

நாட்டின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ் வரும் 15-ல் விண்ணில் ஏவ திட்டம்

புதுடெல்லி: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டை வரும் 15ம் தேதி விண்ணில் ஏவ இருப்பதாக ஐதராபாத்தின் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களும் பங்கேற்கலாம் என கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, விண்வெளி துறையில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின. இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக விக்ரம்-எஸ் எனும் தனியார் ராக்கெட்டை விண்ணில் ஏவ உள்ளது.

இந்த ராக்கெட் வரும் 15ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிட்டுள்ளதாக ஸ்கைரூட் சிஇஓ பவன் குமார் சந்தானா நேற்று கூறி உள்ளார். காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் இந்த ராக்கெட்டில் சென்னையை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட் அட் நிறுவனத்தின் ஸ்பேஸ் கிட்ஸ் எனும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட 2.5 கிலோ பேலோடு அனுப்பப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vikram , The country's first private rocket Vikram-S is scheduled to be launched on the 15th
× RELATED வல்லவன் வகுத்ததடா விமர்சனம்