×

புதுவையில் முதல் முறையாக தீயணைப்பு துறையில் பெண்கள்: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஒப்புதல்

புதுச்சேரி: புதுவையில் அரசு பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. புதுவையில் 1060 அரசு பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. தீயணைப்புதுறையில் 58 வீரர்கள், 12 டிரைவர்கள், 5 நிலைய அதிகாரி என மொத்தம் 75 காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

அனைத்து துறையிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில் தீயணைப்பு துறையில் மட்டும் வாய்ப்புகள் தரப்படுவதில்லை. எனவே பெண்களுக்கும் தீயணைப்பு துறையில் வாய்ப்பு தர வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து ஒரு நிலைய அதிகாரி, 17 வீரர்கள் என மொத்தம் 18 இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முதலமைச்சர் ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் புதுவையில் முதல் முறையாக தீயணைப்பு துறையில் பெண்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியாகவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


Tags : Puducherry ,chief minister ,Rangasamy ,Puduvai , Puducherry chief minister Rangasamy approves women in fire department for first time in Puduvai
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி