×

மாலத்தீவு தலைநகரில் இந்தியர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் தீ விபத்து: 9 இந்தியர்கள், 2 வங்கதேசத்தினர் உயிரிழப்பு

மாலே: மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 9 இந்தியர்கள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலத்தீவில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டினர் வேலைக்காக சென்று அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில், மாலத்தீவு தலைநகர் மாலே பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திடீரேன தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த அடுக்கு மாடி குடியிருப்பின் தரை தளத்தில் மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடையானது செயல்பட்டு வந்தது. இந்த கடையில் ஏற்பட்ட தீயானது அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது. சிலர்  எச்சரிக்கை ஒளி கேட்டு வெளியில் வந்த நிலையில், பலர் மட்டும் அந்த தீயில் சிக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், 9 இந்தியர்கள் மற்றும் 2 வங்கதேசத்தின்  இறந்ததாக கூறப்படுகிறது. அவர்களது உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்கள் முகம் எறிந்த நிலையில் இருப்பதால் இறந்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் அங்கு வந்து மேலும் உள்ள இந்தியர்ககளின் பாதுகாப்பு குறித்தும், விபத்தில் பிழைத்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்ல நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், குமரி மாவட்டத்தை சேர்ந்த பலரும் இந்த பகுதியில் தங்கி இருந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த பொது தொடர்புகள் இணைக்கப்படவில்லை என தூதரக அதிகாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். இதனால் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இறந்திருக்க கூடும் என்ற அச்சநிலை ஏற்பட்டுள்ளது.


Tags : indians , Maldives, 9 Indians, 2 Bangladeshis killed in house fire
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...