×

இலங்கை அரசிடம் ஒப்படைக்க வேண்டாம்: வியாட்நாம் முகாமில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை..!!

வியட்நாம்: இலங்கை அரசிடம் ஒப்படைக்க வேண்டாம் என இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்கு சென்றால் தற்கொலையைத் தவிர வேறுவழியில்லை. இலங்கைக்கு மீண்டும் செல்ல விரும்பவில்லை, எங்களை அனுப்ப வேண்டாம். பிள்ளைகளுடன் இலங்கைக்கு சென்று மீண்டும் வாழ முடியாது. எங்களை ஐ.நா. வசம் ஒப்படையுங்கள். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை வேண்டுகோள் விடுத்தனர். வியாட்நாம் முகாமில் 303 இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர். கனடாவுக்கு தஞ்சமடைய சென்றபோது நடுக்கடலில் படகு பழுதானது. தமிழர்களை மீட்க இலங்கை அரசு முயற்சி செய்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Tags : Lankan ,Vietnam , Government of Sri Lanka, Vietnam camp, Sri Lankan Tamil refugees
× RELATED இலங்கை தமிழ் அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கக் கோரிய வழக்கு..!!