ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல் இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு அவசியம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர்வைகோ வெளியிட்ட அறிக்கை: 1931ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது எடுக்கப்பட்ட சாதிவாரி புள்ளிவிபரங்கள் அடிப்படையில் அந்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. விடுதலைபெற்ற இந்தியாவில், இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, இதர பிற்படுத்தப்பட்டோர் விபரங்கள் எடுக்க வேண்டும் என்று கோரி அகில இந்திய ஓ.பி.சி. ஒருங்கிணைப்புக் குழு அளித்த மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “ஓ.பி.சி. பிரிவு அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்பது அரசின் கொள்கை முடிவு” என்று ஒன்றிய பாஜ அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. நீதிபதிகள், “1951 ம் ஆண்டு எடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை தற்போது மக்கள் நலனுக்காக மாற்ற பரிசீலிக்கலாமே” என்று அறிவுறுத்தி உள்ளனர். ஓ.பி.சி. இடஒதுக்கீட்டுப் பயனை முழுமையாக இதர பிற்படுத்தப்பட்டோர் பெறுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி புள்ளிவிபரங்களையும் எடுக்க ஒன்றிய பாஜக. அரசு முன்வர வேண்டும்.

Related Stories: