×

உலக கோப்பை கால்பந்து தொடக்க விழாவில் பாப் பாடகி ஷகிரா, நோரா பதேஹி கலைநிகழ்ச்சி

கத்தார்:  4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் 20ம்தேதி முதல் கத்தாரில் நடைபெற உள்ளது. 32 அணிகள் பங்கேற்கின்றன. இதில் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படும். இதில் இருந்து 16 அணிகள் ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதிபெறும்.

இதன்தொடக்க விழா வரும் 20ம்தேதி அல்கோர்அல்-பைத் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.  இதில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கொலம்பிய பாப் படாகி ஷகிரா,  இங்கிலாந்து பாடகி துவா லிபா மற்றும் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி ஆகியோர் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். நோரா ஃபதேஹி தமிழ்,இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Shakira ,Nora Badehi ,World Cup football , Pop singer Shakira, Nora Badehi perform at World Cup football opening ceremony
× RELATED ஷகிரா மாதிரி யோசி… பியான்சே போல பாடு!