×

புரோ கபடியில் இன்று மோதல்: புனேரி பால்டனை மீண்டும் வீழ்த்துமா தமிழ் தலைவாஸ்?

புனே: 12 அணிகள் பங்கேற்றுள்ள 9வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் தற்போது புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்று 66வது லீக் போட்டியில், பெங்கால் வாரியர்ஸ்- உபி.யோத்தா அணிகள் மோதின. இந்த போட்டி 41-41 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் தபாங் டெல்லி 40-33 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீ்ழ்த்தியது. தொடர்ச்சியாக 4 தோல்விக்கு பின் டெல்லி மீண்டும் வெற்றிபாதைக்குதிரும்பியது.  

இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு புல்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ், இரவு 8.30 மணிக்கு தமிழ்தலைவாஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.  கடைசியாக புனேரி பால்டனுடன் மோதிய போட்டியில் தமிழ்தலைவாஸ் 34-35 என த்ரில் வெற்றி பெற்றது. இன்றும் வெற்றியை தொடரும் முனைப்பில் களம் இறங்குகிறது. முதல் இடத்தில் உள்ள புனேரியை வீழ்த்தினால் தமிழ்தலைவாஸ் 2வது இடத்திற்கு முன்னேறும் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Tags : Tamil Thalaivas ,Puneri Paltan , Clash in Pro Kabaddi today: Will Tamil Thalaivas beat Puneri Paltan again?
× RELATED புரோ கபடி 10வது சீசன் புதிய சாம்பியன் புனேரி பல்தான்