×

ஒரு மகப்பேறு மரணம் கூட இல்லாமல் நாகை மாவட்டம் சாதனை: மாவட்ட ஆட்சியர் உருவாக்கிய வம்சம் திட்டத்திற்கு பாராட்டு

நாகை: கடந்த 3 ஆண்டுகளாக மகப்பேறு மரணத்தில் தமிழகத்திலேயே முதல் இடத்தில் இருந்த நாகை மாவட்டத்தில் தற்போது 1 மகப்பேறு மரணம் கூட இல்லாமல் சாதனை படைத்துள்ளதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் 2019 முதல் 2020-க்குள் 8 மகப்பேறு மரணங்களும், 2020 - 2021-ம் ஆண்டில் 11 மகப்பேறு மரணங்களும், 2021 முதல் 2022 ஆண்டுகளில் 12 மகப்பேறு மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

ஆனால், நடப்பாண்டில் மார்ச் மாதம் முதல் இதுவரை ஒரு மகப்பேறு மரணம் கூட இல்லை. அதேபோல தமிழகத்திலேயே ஆண் குடும்பநல அறுவை சிகிச்சையில் நாகை மாவட்டம் முதல் இடம் பெற்று தேசிய அளவிலும் பாராட்டு பெற்றுள்ளது. இதனால், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்றாலே அச்சத்துடன் பார்த்து வந்த நாகை மக்கள் தற்போது கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை நோக்கி நம்பிக்கையுடன் வருகின்றனர்.

இதற்கு கடந்த ஆண்டு பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அமல் படுத்திய வம்சம் திட்டமும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள தாய் காக்கும் திட்டம், வம்சம் திட்டம் உள்ளிட்ட கர்ப்பிணி தாய்மார்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த ஆண்டில் மட்டும் 336 தாய்மார்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சைகள் செய்துள்ளதாகவும் அரசு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.   


Tags : birth, death, naga, achievement, lineage, plan, praise
× RELATED தமிழகத்தில் 6ம் தேதி வரை வெப்ப அலை: 5 நாட்களுக்கு கோடை மழை