காங். டிவிட்டர் கணக்கை முடக்கும் உத்தரவு ரத்து

பெங்களூரு: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த நடை பயணத்தை குறிப்பிடும் வகையில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் கன்னட படமான கேஜிஎப்-2 படத்தின் பாடல் அனுமதியின்றி இடம் பெற்றிருப்பதாக எம்ஆர்டி இசை நிறுவனம் காப்புரிமை கோரி பெங்களூரு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீடியோ வெளியிடப்பட்ட காங்கிரஸ் மற்றும் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் டிவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்க டிவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோவை நீக்க தயாராக இருக்கும் போது விசாரிப்பதற்கு என்ன வேலை? எனவே, கீழ் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நாளைக்குள் (இன்றைக்குள்) வீடியோவை நீக்க வேண்டும்,’ என உத்தரவிட்டனர்.

Related Stories: