×

ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி: முதல்வருக்கு ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் நன்றி

சென்னை:  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில்:  எங்கள் கோரிக்கையை பரிசீலித்து, தமிழ்நாடு முழுவதும் 100 சதவீதம் மற்றும் திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களுக்கு 50 சதவீதத் திறனுடனும் ஏற்றுமதி நிறுவனங்களை இயங்க அனுமதியளித்தமைக்கு மனமார்ந்த நன்றியை ஏற்றுமதி தொழில் சார்பாகவும், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்பினால் ஏற்றுமதித் தொழில்துறையினர் தங்களது ஏற்றுமதி ஆர்டர்களை உரிய காலத்தில் முடித்திட பெரிதும் உதவியாக இருக்கும். இது நமது பையர்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கும். தமிழத்திலுள்ள அனைத்து ஏற்றுமதி நிறுவனங்களும் அதன் துணை நிறுவனங்களும் மற்றும் அதில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். நெருக்கடியான காலகட்டத்தில் எங்கள் ஏற்றுமதித் தொழிலுக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கும், கோரிக்கையை ஏற்றுக்கொண்டமைக்கும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் சார்பாகநன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். …

The post ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி: முதல்வருக்கு ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் நன்றி appeared first on Dinakaran.

Tags : Sakthivel ,Export Development Corporation ,Chennai ,Shaktivel ,Readymade Garment Export Development Corporation ,Chief Minister ,M. K. Stalin ,CM ,Dinakaran ,
× RELATED உழவர் சந்தையில் ஐபோன் திருடிய வடமாநில வாலிபர்