×

மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட அளவில் சிறப்பு முகாம்கள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை:.மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வக்கீல் கற்பகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில், மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி செலுத்த வரிசையில் நிற்பதை தவிர்க்க உரிய சான்றிதழை காண்பித்து உடனடியாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.மாற்றுத்திறனாளிகள் நலன் துறை மூலமாக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு என மாவட்ட அளவில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை ஜூன் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….

The post மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட அளவில் சிறப்பு முகாம்கள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,High Court ,Chennai ,.Vakeel Karpagam ,
× RELATED பாலின சார்பற்ற கழிப்பிடங்கள்: அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு