×

அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக புகழேந்தி, மருது அழகுராஜ் நியமனம்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:  அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக புகழேந்தி, மருது அழகுராஜ் நியமிக்கப்படுகிறார்கள். அதேபோன்று, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன்,  நெல்லை மாவட்ட செயலாளர் வி.கே.பி.சங்கர், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக ராமசாமி,  ஈரோடு கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாகவும்,  அமைப்பு செயலாளர்களாக கவிதா ராஜேந்திரன், எஸ்.டி.காமராஜ், பி.வி.கே.பிரபு, கரூர் மாவட்டம், பி.எச்.சாகுல் அமீது, சென்னை மாவட்டம் கோசுமணி, மதுரை மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் மோகன், தூத்துக்குடி மாவட்டம், ஜெயலலிதா இணைச்செயலாளர் துறையூர் கே.கணேஷ் பாண்டியன், சென்னை மாவட்ட மீனவரணி இணை செயலாளர் லோகு, விழுப்புரம் மீனவரணி துணைச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்னர்.


Tags : Marudhu Sayukuraj , AIADMK, Policy Propagation, Secretary, Appointment, OPS Notification
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...