×

வடபழனி முருகன் கோயிலில் பார்வையற்ற முதுகலை பட்டதாரி ஜோடிக்கு திருமணம்: ரூ.1 லட்சம், சீர்வரிசையுடன் நடத்தி வைத்த போலீசார்

சென்னை: பார்வையற்ற முதுகலை பட்டதாரி காதல் ஜோடிக்கு வடபழனி முருகன் கோயிலில் ரூ.1 லட்சம் ரொக்கம், சீர்வரிசை பொருட்களை வழங்கி, வடபழனி போலீசார் திருமணம் நடத்தி வைத்தனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலு. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும்போது தமிழரசி என்ற பார்வையற்றவரை காதலித்து வந்துள்ளார். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க யாரும் முன்வரவில்லை. இதற்கிடையே காதலர்களான பாலு மற்றும் தமிழரசிக்கு திருமணம் செய்து வைக்க லயன்ஸ் கிளப் மற்றும் வடபழனி போலீசார் முன்வந்தனர். பின்னர் நண்பர்கள் புடைசூழ பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான பாலு மற்றும் தமிழரசிக்கு நேற்று காலை வடபழனி முருகன் கோயிலில் வெகு விமர்சையாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு வடபழனி காவல் நிலைய போலீசார் மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். பின்னர் தம்பதிக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

Tags : Vadapalani Murugan Temple , Marriage of blind post graduate couple at Vadapalani Murugan Temple: Rs 1 lakh, conducted by police in an orderly fashion
× RELATED அதிகாலை 4 மணிக்கே நடை திறப்பு வடபழனி...