×

லூலா டா சில்வா வெற்றியை எதிர்த்து பிரேசிலில் போராட்டம்: போலிசோனாரோ ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளில் ராணுவம் தலையிடக்கோரி முழக்கம்

ப்ரசிலியா: பிரேசில் நாடாளுமன்ற தேர்தலை செல்லாது என்று அறிவிக்க கோரி தோல்வியடைந்த போலிசோனாரோவின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன. பிரேசில் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவின் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. விரைவில் பிரேசில் அதிபராக லூலா பதவி ஏற்க உள்ள நிலையில் அவருக்கு எதிராக போலிசோனாரோவின் ஆதரவாளர்கள் நாடு தழுவிய தொடர் போராட்டத்தை முன் எடுத்துள்ளன. தேர்தலில் 1% குறைவாக வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே போலிசோனாரோ தோல்வி அடைந்து இருப்பதால் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ரியோ டி ஜெனீரியோ, ப்ரசிலியா ஆகிய நகரங்களில் குவிந்த போலிசோனாரோ ஆதரவாளர்கள் பிரேசில் தேசிய கோடியை ஏந்தி ராணுவ நிலைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தேர்தல் முடிவுகளை ரத்து செய்து விட்டு அதிபர் போலிசோனாரோ பதவியில் தொடர ராணுவம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். ரியோ டி ஜெனீரியோவில் உள்ள முக்கிய சாலைகளில் போராட்டகாரர்கள் தடையை ஏற்படுத்தி இருப்பதால் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் கோபகபனா கற்கரையில் குவிந்த லூலா டா சில்வாவின் ஆதரவாளர்கள் அவரது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.      


Tags : Brazil ,Lula da Silva ,Polisonaro , Lula da Silva, victory, against, in Brazil, struggle, army, intervene, slogan
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...