×

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார் முன்னாள் துணை அதிபர் கிளாஸ் மெக்சிகோ தூதரகத்தில் கைது: இரு நாடுகளுக்கிடையே உறவு முறிந்தது

கியுடோ: தென்அமெரிக்க நாடான ஈக்வடாரின் துணை அதிபராக ஜார்ஜ் கிளாஸ்(54) 2013 முதல் 2017 வரை பதவி வகித்து வந்தார். ஈக்வடாரில் அரசு கட்டுமான பணிகளுக்கு பிரேசில் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கடந்த 2016ம் ஆண்டில் ஈக்வடாரில் நேரிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பலரது உயிரை பலி வாங்கியது.நிலநடுக்கத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளில் ஊழல் நடந்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஜார்ஜ் கிளாஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் வீட்டு காவலில் அடைக்கப்பட்டார். பின்னர் டிசம்பரில் வீட்டு காவலில் இருந்து வௌியேறிய ஜார்ஜ், ஈக்வடார் தலைநகர் கியுட்டோவில் உள்ள மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

இதுகுறித்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் ஈக்வடார் தலைநகர் மெக்சிகோ தூதகரத்துக்குள் நுழைந்த ஈக்வடார் பாதுகாப்பு படையினர் அங்கு மறைந்திருந்த ஜார்ஸ் கிளாசை அதிரடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இதைதொடர்ந்து ஈக்வடாருடனான தூதரக உறவுகளை முறித்து கொள்வதாக மெக்சிகோ அறிவித்துள்ளது.

The post ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார் முன்னாள் துணை அதிபர் கிளாஸ் மெக்சிகோ தூதரகத்தில் கைது: இரு நாடுகளுக்கிடையே உறவு முறிந்தது appeared first on Dinakaran.

Tags : Ecuador ,vice president ,Carlos ,Mexico ,Quito ,Jorge Glass ,Brazil ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!