×

தொழிலதிபரை கடத்தி சொத்துக்கள் எழுதி வாங்கிய விவகாரம்: கோடம்பாக்கம் மாஜி உதவி கமிஷனர் உட்பட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

* உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை தொடங்கியது
* மேலும் பல போலீஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்

சென்னை: சென்னையில் தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை எழுதி வாங்கிய விவகாரத்தில், முக்கிய குற்றவாளிகளான அகில இந்திய இந்துமகா சபை தலைவர் கோடம்பாக்கம் முன்னாள் உதவி கமிஷனர் சிவக்குமார், முன்னாள் இன்ஸ்பெக்டர் சரவணன், உட்பட 10 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
சென்னை அயப்பாக்கம் 5வது மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ்(37). கம்ப்யூட்டர் நிறுவனம் மற்றும் செக்யூரிட்டி நிறுவனம் உள்பட பல தொழில்களை நடத்தி வந்தார். இவரும், சாய் சாப்டெக் நிறுவன உரிமையாளர் வெங்கடேசனும் சேர்ந்து கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தினர். அதில் ராஜேசுக்கு ரூ.5.5 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. இதனால், வெங்கடேசனிடம் ரூ.2 கோடி கடன் பெற்று ராஜேஷ் செக்யூரிட்டி நிறுவனம் தொடங்கினர்.

அது நஷ்டத்தில் இயங்கியதால், வெங்கடேசனுக்கு தர வேண்டிய கடனுக்கு பதில் செக்யூரிட்டி நிறுவனத்தை எழுதி கொடுத்தார். ஆனால், மோசடி செய்ய நினைத்த வெங்கடேசன், தன் அடியாட்களை விட்டு, தொழிலதிபர் ராஜேஷிடம், நீங்கள் வெங்கடேஷ், சிவா ஆகியோரிடம் ரூ.20 கோடி கடன் பெற்று ஏமாற்றி உள்ளீர்கள். உங்களை கொல்லாமல் விட மாட்டேன் என்று ஒருவர் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தார். இது குறித்து, 2019ம் ஆண்டு, திருமங்கலம் போலீஸ் நிலையம் இன்ஸ்பெக்டர் சரவணன்,ராஜேஷை அழைத்து ெசன்று மிரட்டி அவரின் சொத்து விவரங்களை கேட்டுள்ளார். இதனால் ராஜேஷ் திருமணம் செய்ய உள்ள பெண்ணுடன் கோவைக்கு தப்பி தலைமறைவானார்.

அப்போது செல்போன் சிக்னல் வைத்து, எஸ்.ஐ. பாண்டியராஜன் தலைமையில் 2 போலீசார் கோவையில் தங்கி இருந்த ராஜேஷ் மற்றும் அவரது வருங்கால மனைவியை சென்னைக்கு அழைத்து வந்து பண்ணை வீடு ஒன்றில் அடைத்து வைத்தனர். பின்னர் திருமங்கலம் உதவி கமிஷனர் சிவக்குமார், கோடம்பாக்கம் மற்றும் ஆந்திரா கும்பல் ஆகியோர் தொழிலதிபர் ராஜேஷின் வருங்கால மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிடுவோம் என்று கூறி மிரட்டி தொழிலதிபரின் சொத்துக்களை எழுதி வாங்கினர்.

இதுகுறித்து தொழிலதிபர் ராஜேஷ் அளித்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வெளிமாநில தொடர்புகள் இருந்ததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலதிபர் ராஜேசை, அகில இந்திய இந்துமகா சபை தலைவர் கோடம்பாக்கம் , உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜா, காவலர் ஜெயகுமார், ஏட்டு ஜோசப், கிரி மற்றும் தெலங்கானா தருண், சீனிவாச ராவ், அயப்பாக்கம் வெங்கட சிவனகாகுமார் என 10 பேர் இந்த மோசடியில் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ பாண்டியராஜன் உட்பட 6 போலீசார் உட்பட 10 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அகில இந்து மகா சபை தலைவர் கோடம்பாக்கம் யை கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர். பிறகு அரசு பதவியை தவறாக பயன்படுத்தியதாக உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் உட்பட 6 போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கில் உயர் காவல் துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து ெசன்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கு சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றி கடந்த வாரம் அதிரடியாக உத்தரவிட்டது. +

அதைத்தொடர்ந்து சிபிஐயிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்தனர். அதன்படி சிபிஐ தனது விசாரணையை தொடங்கியது. அதில், தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை எழுதி வாங்கியது உறுதியானது. பின்னர் குற்றத்தில் ஈடுபட்ட தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த தருண், சீனிவாச ராவ், சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த வெங்கட சிவனகாகுமார், அகில இந்து மகா சபை தலைவர் கண்டன் (எ)கோடம்பாக்கம் , முன்னாள் உதவி கமிஷனர் சிவக்குமார், முன்னாள் இன்ஸ்பெக்டர் சரவணன், முன்னாள் உதவி ஆய்வாளர் பாண்டியராஜா, முன்னாள் முதல் நிலை காவலர் ஜெயகுமார், முன்னாள் தலைமை காவலர்கள் ஜோசப், கிரி ஆகிய 10 பேர் மீது ஐபிசி 147, 323, 347, 384, 420 என 5 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

அதைதொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளுக்கு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.  இதனால் இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.



Tags : CBI ,Kodambakkam , Businessman, Property, Affairs, Kodambakkam Ex-Commissioner, CBI Case Filed
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...