×

மாணவியை ரயிலில் தள்ளி கொன்ற சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை: கல்லூரி மாணவியை ரயில் முன்பாக எட்டி உதைத்து கொலை செய்த  சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 13ம் தேதி சதீஷ் என்பவரால், தனியார் கல்லூரி மாணவி சத்யா ரயில் முன் தள்ளி படுகொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, துக்கம் தாங்காமல் சத்யாவின் தந்தை மாணிக்கமும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இக்கொலை வழக்கு தொடர்பாக போலீசார் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு கடந்த 14ம் தேதி உத்தரவிட்டார். தொடர்ந்து, டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில் காவல் ஆய்வாளர் ரம்யா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், சத்யாவின் குடும்பத்தாரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சதீஷையும் சிபிசிஐடி போலீசார், ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அதேபோல் சம்பவம் நடந்தபோது சத்யாவுடன் இருந்த சக மாணவிகள் 3 பேரிடமும் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்றும், எந்த வேகத்தில் ரயில் வந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என்பது குறித்தும் ரயில் வல்லுனர்களுடன் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் பரிந்துரையின் அடிப்படையில் சத்யா கொலை வழக்கு குற்றவாளியான சதீஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : Satish , Satish was accused of killing a student by pushing him in a train
× RELATED வாலிபர் கொலையில் ஒருவர் கைது