குளித்தலை அருகே கந்துவட்டி கேட்டு மிரட்டல் அதிமுக பிரமுகர் கைது

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடசேரி ஊராட்சி, பாலசமுத்திரப்பட்டியை சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர் வசந்தா. இவரது கணவர் பழனிச்சாமி. இவர் தோகைமலை கிழக்கு ஒன்றிய அதிமுக ஜெ.பேரவை செயலாளராக உள்ளார். பழனிச்சாமி மீது குளித்தலை அண்ணா நகரைச் சேர்ந்த மருதைவீரன் என்பவர் குளித்தலை டிஎஸ்பியிடம் கொடுத்த புகார் மனுவில், பழனிச்சாமியிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்று வட்டி கொடுத்து வந்த நிலையில் கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார். மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுப்பதாக கூறியிருந்தார். அதனை தொடர்ந்து அவர் மீது குளித்தலை போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று காலை சமுத்திரப்பட்டிக்கு சென்று பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: