உலக சுற்றுலா வர்த்தக கண்காட்சியை பார்வையிட புதுச்சேரி எம்எல்ஏக்கள் லண்டன் பயணம்

புதுச்சேரி: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வருகிற 7ம்தேதி முதல் 9ம்தேதி வரை உலக சுற்றுலா பயண சந்தை எனும் பெயரில் வர்த்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 100 நாடுகளைச் சேர்ந்த 2500 பேர் தங்களுடைய சுற்றுலா சார்ந்த வர்த்தக பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர். இதில் புதுச்சேரி அரங்கமும் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் அரசு சார்பில் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, தலைமை செயலர் ராஜீவ் வர்மா, அரசு செயலர் அருண், சுற்றுலாத்துறை இயக்குனர் பிாியதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதற்காக சென்னையில் இருந்து ேநற்றிரவு விமானம் மூலம் அவர்கள் பாரீஸ் நகருக்கு செல்கின்றனர். இதனிடையே இந்த கண்காட்சியை பார்வையிட தங்களது சொந்த பயணமாக புதுச்சேரியில் இருந்து புதுவை எம்எல்ஏக்கள் நேற்றிரவு லண்டன் புறப்பட்டனர். இதற்காக அவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை (6ம்தேதி) ஸ்ரீவாரி சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

இதில் புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் பங்கேற்கிறார். இதில் அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அனைவரும் அங்கிருந்து ரயில் மூலம் லண்டன் சென்று, ஒருவாரம் அங்கு முகாமிட்டு வர்த்தக கண்காட்சி மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களையும் பார்வையிடுகின்றனர்.

Related Stories: