×

நவம்பர் 9-ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நவம்பர் 9-ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு  திசையில் தமிழ்நாட்டை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


Tags : southwest Bengal Sea ,Meteorological Research Centre , A low pressure area is likely to form over Southwest Bay of Bengal on November 9: Meteorological Department informs
× RELATED தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும்...