×

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுபெறக்கூடும்: சென்னை வானிலை மையம்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுபெறக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுபெறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு “மிக்ஜம்” என பெயரிடப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் காரணமாக வரகடலோர மாவட்டங்கள், டெல்டாவில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே மிக்ஜம் புயல் கரையை கடக்கக் கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுபெறக்கூடும்: சென்னை வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : southwest Bengal Sea ,Chennai Meteorological Center ,CHENNAI ,SOUTH-WEST BENGAL SEA ,Southwest Bengal ,Chennai Weather Centre ,Dinakaran ,
× RELATED ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு...