×

ராஜராஜசோழன் ஓய்வெடுத்த கருங்கல்லால் ஆன மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா கடந்த 3ம் தேதி மிகவும் சிறப்பாக கொண்டாடபட்டது. தஞ்சாவூர் மாநகர் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்ட பல நினைவுச் சின்னங்களும் அவர் வாழ்ந்து சென்ற பல மண்டபங்களும் உள்ளது. அந்த கட்டடங்கள் இன்றும் சீர் செய்யப்படாமல் புதர் மண்டி உள்ளது மிகவும் வேதனையாக உள்ளது.

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் குளிச்சபட்டு கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் போது, அவர் ஓய்வு எடுக்க ஒரு மண்டபத்தை அமைத்து அந்த மண்டபத்தில் அவரது யானை படை மற்றும் குதிரை படை வீரர்கள் ஓய்வெக்க இடம் அமைத்திருந்தார். அந்த இடம் 1000 ஆண்டுகளாகியும் இன்றும் கம்பீரம் போல் காட்சியளித்து வருகிறது.

அந்த இடத்தை ஆய்வு செய்து மரம் செடிகளை அகற்றி பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றன. இதேபோல் இராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்ட பல நினைவிடங்களை புதுப்பிக்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். மேலும் தொல்லியல் துறையை இது மாதிரி இடங்களை ஆய்வு செய்து பாதுகாத்து சீர் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கின்றனர். இந்த மண்டபம் ஆனது கருங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவைகளால் கட்டப்பட்டுள்ளது. பல புயல்கள் பல மழைகளைத் தாண்டியும் இன்றும் கம்பீரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajarajacholan , Black stone hall where Rajarajacholan rested should be renovated: Community activists, public expect
× RELATED மாமன்னர் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா தொடங்கியது..!!