×

சேலத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் ஏற்படுத்தியுள்ள மருத்துவ கட்டமைப்புகளை பார்த்துவிட்டு அரசின் நடவடிக்கை பற்றி பேச வேண்டும்

சென்னை:  துரைப்பாக்கத்தில் இம்காப்ஸ் மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவ மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள்  அரவிந்த் ரமேஷ், அசன் மவுலானா, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை  இயக்குனர் கணேஷ் மற்றும் இம்காப்ஸ் தலைவர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  சட்டமன்ற கூட்டம் முடிந்தவுடன், கொரோனா முதல் நிலையை முற்றிலுமாக கட்டுப்படுத்தியது போலவும், கொரோனா என்ற வார்த்தை தமிழகத்தில்  இல்லை என்பது போலவும் கூறியுள்ளார். கடந்த மாதம் 7ம் தேதி  கொரோனா தொற்று 26,465ஆக இருந்தது. கடந்த 21ம் தேதி படிப்படியாக உயர்ந்து 36,184ஆக இருந்தது. இன்றைக்கு 7,700ஆக குறைந்துள்ளது. இதற்கு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை தான். ஆனால் கொரோனாவை  கட்டுப்படுத்த எதுவுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருக்கிறார். கொரோனா முதல் அலையில் ஒரு மாதம் மட்டுமே சென்னையில் இருந்தார். பின்னர் சேலத்தில் தஞ்சமடைந்தார். கலைஞர் காலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் முயற்சியினால் அங்கு சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி எந்த மருத்துவ கட்டமைப்பும் ஏற்படுத்தவில்லை. 2வது அலையின் போது இஎஸ்ஐ மருத்துவமனையில் முதற்கட்டமாக 50 படுக்கைள், முதலமைச்சர் தீவிர நடவடிக்கை காரணமாக 200 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவமனை உருவாக்கப்பட்டது. சேலம் ஸ்டீல் பிளாண்ட் அருகே இந்தியாவிலேயே கொரோனா சிகிச்சைக்காக ஒரே இடத்தில் ஆயிரம் படுக்கை கொண்ட  மையத்தை முதல்வர் உருவாக்கினார்.சேலத்தில் ஒட்டுமொத்த மருத்துவ கட்டமைப்பும் ஒன்றறை மாதத்தில் உருவாக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை பார்வையிட்டு அதன்பிறகு திமுக அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்பதை கூறட்டும். இவ்வாறு  கூறினார்….

The post சேலத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் ஏற்படுத்தியுள்ள மருத்துவ கட்டமைப்புகளை பார்த்துவிட்டு அரசின் நடவடிக்கை பற்றி பேச வேண்டும் appeared first on Dinakaran.

Tags : salesam ,Chennai ,Minister ,People's Well-Being ,Imcops Hospital ,Siddhaya Medical Centre ,Thuripakkam ,Suframanyan ,Saleam ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை...