×

‘ஆன்லைன் கேமிங்’ மோசடி மூலம் ரூ.4,000 கோடி பணப் பரிவர்த்தனை அம்பலம்: சீனாவின் ‘டம்மி’ இந்திய இயக்குனர்களுக்கு சிக்கல்

புதுடெல்லி: ஆன்லைன் கேமிங் மோசடி மூலம் ரூ. 4,000 கோடி அளவிற்கு மோசடி பணப்பரிவத்தனை குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வரும்நிலையில், சீனாவின் டம்மி இந்திய இயக்குனர்கள் குறித்து அதிக மோசடிகள் நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது. நாடு முழுவதும் ‘ஆன்லைன் கேமிங்’ மூலம் நடைபெறும் மோசடி தொடர்பான புகார்களை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. குறிப்பாக சீன நிறுவனங்களின் சார்பில் இந்தியாவில் ‘ஆன்லைன் கேமிங்’ மோசடிகள் அதிகம் நடந்துள்ளன.

அந்த வகையில் சீனாவைச் சேர்ந்த சில நிறுவனங்கள் போலி இந்திய இயக்குநர்கள் (டம்மி) மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. சுமார் ரூ.4,000 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் ஆன்லைன் கேமிங் மூலம் நடந்துள்ளன. சீன நிறுவனங்கள் தொடர்பான வழக்கில், 1,815 சந்தேகத்திற்கிடமான கணக்குகளின் பணப் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன. லிங்க்யூன் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் மற்றும் டோக்கிபே டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் என்ற இரண்டு நிறுவனங்கள் ரூ.1,146 கோடி அளவுக்கு பயனாளிகளை ஏமாற்றி உள்ளன.

இந்த நிறுவனங்களின் ஆரம்ப மூலதனம், சீன தாய் நிறுவனங்களிடமிருந்து அன்னிய நேரடி முதலீடு வடிவில் கொண்டுவரப்பட்டது. அதற்காக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தடை செய்யப்பட்ட மொபைல் அப்ளிகேஷன்களுக்கு இந்தியாவில் செயல்பட்ட நிறுவனங்கள் கட்டணம் வசூலித்து மோசடி செய்துள்ளன.

இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில்:
ஆன்லைன் கேமிங் ​​மோசடியின் பின்னணியில் உள்ளவர்கள் அவர்களின் உள்நாட்டு வருவாயைப் பெறுவதற்கும், சர்வதேச அளவிலான ‘ஹவாலா’ பணத்தை எளிதாக பரிவர்த்தனைகளை செய்யவும் ஆன்லைன் கேமிங் நடத்தி உள்ளனர். இவ்வழக்குகள் தொடர்பாக சீன நாட்டை சேர்ந்த யான் ஹாவ், கிரிப்டோ வர்த்தகர் நைசர் ஷைலேஷ் கோத்தாரி, இந்திய இயக்குனர் திராஜ் சர்க்கார், தீபக் நய்யார் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்’ என்று தெரிவித்தன.


Tags : 'Online gaming' scam, Rs 4,000 crore cash transaction, problem for Indian directors
× RELATED பாஜகவுக்கு கூட்டணி அமைக்காததால் தான்...