×

சென்னையில் எதிர்பாராத விபத்துகளில் உயிரிழந்த இரண்டு நபர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

சென்னை: சென்னையில் எதிர்பாராத விபத்துகளில் உயிரிழந்த இரண்டு நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 இலட்சத்திற்கான நிவாரணத் தொகையினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 இலட்சத்திற்கான காசோலைகளை சென்னை மாவட்டம், புரசைவாக்கம் தாலுக்கா, புளியந்தோப்பு, பிரகாஷ் ராவ் தெருவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பலியான திருமதி சாந்தி அவர்களின் குடும்பத்தாருக்கும், மின் விபத்தில் பலியான சென்னை மாவட்டம், பெரம்பூர் தாலுக்கா, பி.வி.காலனி, 5வது தெருவைச் சார்ந்த திரு. சி. தேவேந்திரன் அவர்களின் குடும்பத்தாருக்கும் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (04.11.2022) வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பெருமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வார்டு-41, எழில் நகர் பக்கிங்ஹாம் கால்வாயினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, வார்டு-47, அம்பேத்கர் நகர் கால்வாயில் தடுப்பு வேலிகள் அமைப்பது தொடர்பாகவும், வார்டு-40, இளைய தெருவில் மழைநீர் தங்குதடையின்றி வெளியேற மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-60, என்.ஆர்.டி. பிரிட்ஜ் அணுகு சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வுகளின் போது, மேயர் திருமதி ஆர்.பிரியா, வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி , சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜான் எபினேசர் ஜெ , முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அமிர்த ஜோதி, இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர்கள் இளைய அருணா (நகரமைப்பு), திருமதி சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரி விதிப்பு மற்றும் நிதி), துணை ஆணையாளர்கள் டி.சினேகா, இ.ஆ.ப., (கல்வி) எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்), மண்டலக் குழுத் தலைவர்கள் நேதாஜி யு.கணேசன், சரிதா மகேஷ்குமார் உட்படபலர் உடனிருந்தனர்.

Tags : Chennai ,Minister ,KN Nehru , Chennai, unexpected accident, relief, Minister KN Nehru
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்