×

2020-21ம் ஆண்டு கல்வி செயல்பாடு தமிழகம், புதுவை மூன்றாவது இடம்: ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் 2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாட்டு தரவரிசை குறியீட்டில் தமிழகம், புதுச்சேரிக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை 2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாட்டு தரவரிசை குறியீட்டை நேற்று வெளியிட்டது. பள்ளிக் கல்வி அமைப்புமுறையின் செயல்பாடுகள் அடிப்படையில் இந்த தரிவரிசை குறியீடு வழங்கப்படுகிறது.

இதன்படி, தமிழகம், புதுவை ஆகியவை முறையே ஆயிரத்துக்கு 855, 897 புள்ளிகள் பெற்று 3வது நிலையில் உள்ளன. கற்றல் வெளிப்பாடுகள் பிரிவில் 132 புள்ளிகளையும், அணுகல் பிரிவில் 78 புள்ளிகளையும், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளில் 131 புள்ளிகளையும், சமத்துவம் என்ற பிரிவில் 183 புள்ளிகளையும்,  ஆளுகை நடைமுறை என்ற பிரிவில் அதிகபட்சமாக 331 புள்ளிகளையும் தமிழகம் பெற்றுள்ளது. புதுச்சேரிக்கு கற்றல் வெளிப்பாடுகளில் 124 புள்ளிகளும்,  அணுகலில் 76 புள்ளிகளும், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளில் 134 புள்ளிகளும், சமத்துவப் பிரிவில் 220 புள்ளிகளும், ஆளுகை நடைமுறையில் 343 புள்ளிகளும் கிடைத்துள்ளது.

Tags : Tamil Nadu ,Puduwa ,Place ,Union Education Ministry , 2020-21 Education Activity Tamil Nadu, Puduwa Third Place: Union Education Ministry Notification
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...