தீபாவளி பண்டிகை விற்பனையில் வரி ஏய்ப்பு புகார்: கரூர் ஜவுளி நிறுவனத்தில் 2வது நாளாக வருமானவரித்துறை அதிரடி ரெய்டு..!!

கரூர்: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருக்கும் வணிக நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தீபாவளி பண்டிகை காலங்களில் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவல் அடிப்படையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். கரூரில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான சிவா டெக்ஸ் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை தொடங்கி இரவு வரை சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சோதனையை தொடர்வதால் வரி ஏய்ப்பு உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விழுப்புரத்தில் எம்.எல்.எஸ். குழுமத்திற்கு சொந்தமான ட்வின்ஸ் வணிக வளாகம், கல்வி நிறுவனம் உட்பட 10 இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோன்று விழுப்புரத்தில் இருக்கும் மற்றொரு பிரபல ஜவுளி கடையான கன்னிகா பரமேஸ்வரி ஜவுளி ஸ்டோரிலும் இன்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் கடையை மூடி ரெய்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories: