×

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தில் பிரபுதேவா, விஜய் சேதுபதி, அனிருத்

சென்னை:  இந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில்  கடந்த 2018ல் வெளியாகி வெற்றிபெற்ற ‘அந்தாதூன்’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ள படம், ‘அந்தகன்’. நடிகர் தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். மிகவும் வித்தியாசமான கேரக்டரில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். மற்றும் பிரியா ஆனந்த், சிம்ரன், யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, மனோபாலா நடித்துள்ளனர். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தை தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வாங்கியுள்ளார்.

இந்நிலையில், இந்தப்படத்தின் கிளைமாக்சில் இடம்பெறுவதற்காக உருவாக்கப்படும் ‘டோர்ரா புஜ்ஜி’ என்ற பாடலை இசை அமைப்பாளர் அனிருத், விஜய் சேதுபதி இணைந்து பாடியுள்ளனர். பிரபுதேவா நடனப் பயிற்சி அளிக்கிறார். பிரசாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடனக்கலைஞர்கள் இணைந்து ஆட உள்ள இந்த ஒரு பாடல் காட்சிக்காக சென்னையில் மிகப் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சி படமானதும் ‘அந்தகன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் என்று தியாகராஜன் தெரிவித்தார்.



Tags : prabuddeva ,vijay ,anirut ,prasanth , Prashant, Andhagan', Prabhu Deva, Vijay Sethupathi, Anirudh
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch