×

பொருளாதாரத்தை சீரமைக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பங்கை விற்க ஒப்புதல்; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

கொழும்பு: பொருளாதாரத்தை சீரமைக்க ஸ்ரீ லங்கன் ஏர்லைன்சின் 49 சதவீத பங்குகளை விற்க, இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலவாணி வரலாறு காணாத சரிவு, சுற்றுலாத்துறை, தொழில்கள் முடங்கியதால் ஏற்றுமதி, இறக்குதி பாதிப்பு போன்ற காணரங்களால் உள்நாட்டு உற்பத்தி முற்றிலும் முடங்கி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட அரசிடம் பணம் இல்லை.

இதன் காரணமாக நஷ்டத்தில் இயங்கும் தனது நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீ லங்கன் ஏர்லைன்சின் பங்குகளை விற்க, இலங்கை அரசு முடிவு செய்தது. அதன்படி, 49 சதவீத  பங்குகளை விற்க உள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை  அரசு அறிவித்தது. இது குறித்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், பங்குகளை விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே நேரம், ஒரே நபரிடம் பங்குகளை விற்காமல், குறிப்பிட்ட சில முதலீட்டாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வெளிப்படைதன்மையுடன் விற்பது என முடிவு செய்யப்பட்டது.



Tags : SriLankan Airlines , SriLankan Airlines agrees to sell stake to revive economy; Decision in cabinet meeting
× RELATED பயணிகள் குறைவு: 2 இலங்கை விமானங்கள் ரத்து