மதுரை வங்கியில் தேவர் தங்கக்கவசம் ஒப்படைப்பு

மதுரை: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை  நிகழ்ச்சி நிறைவடைந்ததையடுத்து, நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் ஆகியோர் முன்னிலையில் தங்கக்கவசம் நேற்று களையப்பட்டது. அதனை பலத்த பாதுகாப்புடன் மதுரை அண்ணா நகர் வங்கிக்கு கொண்டு வந்தனர். காந்தி மீனாள் மற்றும் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் வங்கி அதிகாரிகளிடம்  தங்கக்கவசத்தை ஒப்படைத்தனர். பின்னர் தங்க கவசம் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது.

Related Stories: