டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர்: சபலென்கா, மரியா சக்கரி வெற்றி

போர்ட் வொர்த்: 2022ம் ஆண்டு சீசனில் டென்னிஸ் தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள ஜோடிகளும் கலந்து கொள்ளும் டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் வரும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் போர்ட் வொர்த் நகரில் இன்று தொடங்கியது. இதில் ஒற்றையரில் 8 வீராங்கனைகளும் இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றனர்.

முன்னாள் அமெரிக்க வீராங்கனை டிரேசி ஆண்டின் பெயரிலான குரூப்பில், இகா ஸ்வியாடெக் போலந்து, நம்பர் 1ரேங்க்,),  கோகோ காஃப் (அமெரிக்கா, 4வது ரேங்க்), கரோலின் கார்சியா (பிரான்ஸ், 6வது ரேங்க்)டாரியா கசட்கினா (ரஷ்யா, 8வது ரேங்க்), நான்சி ரிச்சி பெயரிலான குரூப்பில் ஓன்ஸ் ஜபீர் (துனிசியா, 2வது ரேங்க்), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா, 3வது ரேங்க்),மரியா சக்கரி (கிரீஸ், 5வது ரேங்க்),   அரினா சபலென்கா (பெலாரஸ், 7வது ரேங்க்). ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த போட்டியில் நான்சி ரிச்சி குரூப்பில் மரியாசக்கரி, ஜெசிகா பெகுலா மோதினர். இதில் 7-6,7-6 என்ற செட்கணக்கில் மரியா சக்கரி வெற்றி பெற்றார். இதே குரூப்பில் மற்றொரு போட்டியில் அரினா சபலென்கா, 3-6,7-6,7-5 என்ற செட் கணக்கில், ஒன்ஸ் ஜபீரை வென்றார்.

Related Stories: