×

குழந்தை கொலையா?: உசிலம்பட்டியில் பிறந்த 80 நாட்களில் பெண் சிசு உயிரிழப்பு..போலீஸ் விசாரணை..!!

மதுரை: உசிலம்பட்டியில், பிறந்த 80 நாட்களில் பெண் சிசு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோவிலாங்குளத்தைச் சேர்ந்த சிவராஜா - கருப்பாயி தம்பதிக்கு 5, 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 80 நாட்களுக்கு முன்பு சிவராஜா தம்பதிக்கு 3வதாக ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே பெண் சிசுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 18ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் கூறப்பட்டுள்ளது.

இரு குழந்தைகளும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் நேற்றிரவு பெண் குழந்தை உயிரிழந்தது. பால் குடிக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. இந்நிலையில், பெண் சிசு இயற்கையாக உயிரிழந்ததா? அல்லது கொலை செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Uzilampatti , Usilampatti, female infant, death
× RELATED உசிலம்பட்டியில் நீதிமன்றம் அமைக்க இடம் ஆய்வு