×

துணிவு பட புரமோசனுக்கு வர அஜீத் மறுப்பு

சென்னை: அஜீத் தற்போது நடித்து வரும் படம் ‘துணிவு’.இதனை எச்.வினோத் இயக்கி வருகிறார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து புரமோசன் பணிகளை  தயாரிப்பாளர் போனி கபூர் தொடங்கி உள்ளார். படத்தின் புரமோசனுக்கு அஜீத் உதவ வேண்டும் என்று போனி கபூர் கேட்டு வருவதாகவும், அதற்கு அஜீத் மறுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

அஜீத் தான் நடிக்கும் எந்த படத்தின் புரமோசன் பணிகளிலும் கலந்து ெகாள்வதில்ைல. பத்திரிகையாளர்களையும், மீடியாக்களையும் சந்திப்பதில்லை என்பதை தனது நடைமுறையாக வைத்திருக்கிறார். இந்த நிலையில் அஜீத் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் படத்தின் புரமோசன் தொடர்பாக ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார் ‘ஒரு நல்ல படம் தனக்கான புரமோசனை தானே தேடிக் கொள்ளும்’ என்று கூறியிருக்கிறார். இதனை சுரேஷ் சந்திரா அஜீத் சார்பில், தனது டிவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். இது தயாரிப்பாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : Ajith , Ajith refused to come to Thadhavu movie promotion
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!