×

நியூசிலாந்துடன் டி20 தொடர், இந்திய அணிக்கு ஹர்திக் கேப்டன் ரோகித், கோஹ்லிக்கு ஓய்வு

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டி20 அணிக்கான கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். நியூசி. சுற்றுப்பயணத்தில் கேப்டன் ரோகித் ஷர்மா, நட்சத்திர வீரர் விராத் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியுடன் நடக்க உள்ள ஒருநாள் தொடரில், இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் களமிறங்குகிறது.

இந்த தொடர்கள் முடிந்ததும், வங்கதேசம் செல்லும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர்களுக்கான இந்திய அணியையும் தேர்வுக் குழுவினர் நேற்று அறிவித்துள்ளனர். இந்தியா - நியூசிலாந்து மோதும் முதல் டி20 போட்டி வெலிங்டனில் நவ. 18ம் தேதி நடக்கிறது. இந்திய டி20 அணி (நியூசி. டூர்): ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பன்ட் (துணை கேப்டன் & கீப்பர்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

இந்திய ஒருநாள் அணி (நியூசி. டூர்): ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பன்ட் (துணை கேப்டன் & கீப்பர்), கில், ஹூடா, சூரியகுமார், ஷ்ரேயாஸ், சாம்சன், சுந்தர், ஷர்துல், ஷாபாஸ் அகமது, சாஹல், குல்தீப், அர்ஷ்தீப், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக். இந்திய ஒருநாள் அணி (வங்கதேச டூர்): ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), தவான், கோஹ்லி, ரஜத் பத்திதார், ஷ்ரேயாஸ், ராகுல் திரிபாதி, பன்ட், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், சுந்தர், ஷர்துல், ஷமி, சிராஜ், தீபக் சாஹர், யஷ் தயாள். இந்திய டெஸ்ட் அணி: (வங்கதேச டூர்): ரோகித் (கேப்டன்), ராகுல் (துணை கேப்டன்), கில், புஜாரா, கோஹ்லி, ஷ்ரேயாஸ், பன்ட், கே.எஸ்.பரத், ஆர்.அஷ்வின், ஜடேஜா, அக்சர், குல்தீப் யாதவ், ஷர்துல், ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ்.Tags : T20 ,New Zealand ,Hardik ,Rohit ,Kohli , T20 series with New Zealand, Hardik skipper Rohit for Indian team, Kohli retired
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...