×

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சரிவு

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில், வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு தினமும் லாரிகளில், தக்காளி, வெங்காயம், அவரை, கேரட், கத்திரிக்காய், முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டு 650 வாகனங்களில்  7,000 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன. எனவே, கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.20க்கும், நவீன் தக்காளி ரூ.25க்கும், கேரட் ரூ.60க்கும் பீன்ஸ் ரூ.35க்கும், பீட்ருட் ரூ.25 க்கும், கத்திரிக்காய் ரூ.20க்கும், புடலங்காய் ரூ.15க்கும் முருங்கைகாய் ரூ.40க்கும் வெண்டைக்காய் ரூ.15க்கும், சவ்சவ் ரூ.12க்கும் முள்ளங்கி ரூ.15க்கும், பீர்க்கங்காய் ரூ.20க்கும் எலுமிச்சை ரூ.50க்கும், நூல்கோள் ரூ.20க்கும், பச்சைமிளகாய் ரூ.30க்கும் கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.3க்கும், புதினா ரூ.2க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு காய்கறிகளின் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ். முத்துகுமார் கூறுகையில், ‘‘வரத்து அதிகரிப்பால் அனைத்து காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’’ என கூறினார்.

Tags : Koyambedu , Vegetables prices fall in Koyambedu market
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...