முத்துராமலிங்க தேவர் 115வது பிறந்தநாள் சென்னையில் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை; பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்

சென்னை: சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், டி.ஆர்.பாலு எம்.பி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் மயிலை த.வேலு, தாயகம் கவி, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி மண்டல குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பொள்ளாச்சி ஜெயராமன், மாதவரம் மூர்த்தி, பாண்டியராஜன், சரோஜா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாமக சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாஜ சார்பில் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், சதீஷ்குமார், மாவட்ட தலைவர் காளிதாஸ், முன்னாள்  மாவட்ட  துணைத்தலைவர் ஐ.கருப்பையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேமுதிக சார்பில் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்கே.சுதீஷ் ஆகியோர் மாலை அணிவித்தனர். தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம்  தென் மண்டல தலைவர் ஆர்.மாதேஸ்வரன், தென் மண்டல செயலாளர்  சி.ஆர்.ரமேஷ்  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல கவிஞர் வைரமுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்தனர்.

Related Stories: