அதிக எடையை கையாண்டு வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை: சீனாவிலிருந்து இறக்குமதியான 120 காற்றாலை இறகுகள்

தூத்துக்குடி : தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு ஒரே நேரத்தில் 120 காற்றாலை இறகுகள் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பது புதிய சாதனையாக கருதப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் காற்றாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்காக சீனாவில் தயாரிக்கப்பட்ட 120 காற்றாலை இறகுகள் பெங்க் ஷிசிங் என்ற கப்பல் மூலமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு வந்தடைந்தன. 77 மீட்டர் கொண்ட காற்றாலை இறகுகள் துறைமுகத்திற்கு வந்தடைந்த 44 மணி நேரத்தில் இறக்கப்பட்டு காற்றாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி துறைமுகத்தில் போதுமான இடவசதியும், விரிந்த சரக்கு பெட்டக வசதியும் இருப்பதால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை எளிதில் கையாள முடிவதாகவும் இது போன்ற அதிகம் நீளம் கொண்ட காற்றாலை இறகுகள் மற்றும் அதிக எடை கொண்ட பொருட்களை கையாள முடிவதாக துறைமுக அலுவலர்கள் தெரிவித்தனர். அதிக நீளமும், எடையும் கொண்ட 120 காற்றாலை இறகுகளை கையாண்டதன் மூலமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை படைத்திருப்பதாக கருதப்படுகிறது.

Related Stories: